News August 20, 2024
உலகின் முதிய பெண்மணி மரியா காலமானார்

உலகின் முதிய பெண்மணி எனக் கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் மோரேரோ, தனது 117ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவில் பிறந்த அவர், கடந்த 20 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். 2 உலகப் போர், கோவிட்-19 பெருந்தொற்று என பலவற்றை சந்தித்த அவருக்கு, கடந்த 2023இல் உலகின் முதிய பெண்மணி என்ற கின்னஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 15, 2026
ஒரே நாளில் 88 லட்சம் கேஸ் சிலிண்டர் புக்கிங்!

எங்கு நமக்கு சிலிண்டர் கிடைக்காமல் போகிவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் முண்டியடித்து புக்கிங் செய்து வருகின்றனர். கேஸ் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தாலும் மக்களின் அச்சம் குறையவில்லை. நேற்று முன்தினம் மட்டும் 88 லட்சம் கேஸ் சிலிண்டர்கள் புக் செய்யப்பட்டதாக பெட்ரோலிய துறை தெரிவித்துள்ளது. இதனால் தேவையின்றி கேஸ் புக்கிங் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
News March 15, 2026
விஜய்யிடம் 2 நாள் விசாரணை நடத்த திட்டமா?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 3-வது முறையாக இன்று CBI முன் விஜய் ஆஜராக உள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் நேற்று அவர் டெல்லி சென்றார். இதனிடையே அவரிடம் CBI 2 நாள்கள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் விசாரணைக்கு பின்னரே 2-வது நாள் தொடருமா என தெரிய வரும். எனினும் முன்கூடியே 2 நாள்களுக்கு தயாராக வர விஜய் தரப்பிடம் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
News March 15, 2026
அதிமுக + விஜய்.. EPS முடிவை கூறினார்

NDA கூட்டணியில் தவெகவை இணைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக EPS-யிடம் நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. விஜய்யிடம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை என EPS திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் தவெக, NDA கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு குறைவு என்பதால், விஜய் தனித்தே களம் காண்பார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


