News March 28, 2024
உலகின் மிகப்பெரிய அனகோண்டா உயிரிழப்பு

பிரேசிலில் உள்ள உலகின் மிகப்பெரிய ராட்சத அனகோண்டா பாம்பு உயிரிழந்தது. அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த இந்த அனகோண்டா பாம்பை, ‘பிரையன் ஃப்ரை’ என்பவருடைய அறிவியல் ஆராய்ச்சி குழு சமீபத்தில் கண்டு பிடித்தது. இந்த பாம்பு பற்றிய ஆவணப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில், இன்று மர்ம நபர்களால் அந்த பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கு வாழும் பழங்குடியினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
BREAKING: முக்கிய அரசியல் தலைவரை சந்திக்கிறார் விஜய்

நாளை புதுச்சேரிக்கு செல்லும் வழியில், பாமக நிறுவனர் ராமதாஸை விஜய் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுமா அல்லது நட்சத்திர விடுதியில் நடைபெறுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை இருவரும் சந்தித்தால் அரசியலில் இதுதான் நாளை ஹாட் டாபிக். முன்னதாக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றபோது, விஜய் சந்திக்கவில்லை என்பதை நாசுக்காக ராமதாஸ் கூறியிருந்தார்.
News December 8, 2025
பாதி கிணறு மட்டுமே கடந்துள்ளோம்: மு.க.ஸ்டாலின்

SIR பணியில் நாம் பாதி கிணற்றை மட்டுமே கடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ‘என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி’ எனும் தலைப்பில் காணொலி வாயிலாக மாவட்ட செயலாளர்கள், நகரம், ஒன்றியம், பேரூர் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, விடுபட்ட தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க திமுகவினர் மும்முரமாக பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.
News December 8, 2025
இறந்த அம்மாவுக்காக.. 85 கிலோ உடல் எடையை குறைத்த மகன்!

தாயை இழந்த வேதனையில் இருந்த மகனை மேலும் நொறுக்கியது அவரது 160 கிலோ உடல் எடை. அவருக்கு பொருத்தமான பாதுகாப்பு உடை(PPE) இல்லாததால் மின் மயானத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், 2 PPE அணிந்து இறுதி கடமையை முடித்தவரின் மனதில், அன்று முதல் தணியாத தீ ஒன்று பற்றி எரிந்துள்ளது. கடுமையான உடற்பயிற்சி & டயட் மூலம் 85 கிலோ குறைத்து, இது தனது தாய்க்கு செலுத்தும் மரியாதை என துக்கத்துடன் கூறியுள்ளார்.


