News August 26, 2024

3ஆம் உலகப்போர் மூளும்: டிரம்ப்

image

3ஆம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பான X பதிவில், மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக குண்டுகள் வீசப்படுவது கவலை அளிப்பதாக கூறியுள்ளார். இதே நிலைமை நீடித்தால் 3ஆம் உலகப்போர் மூளும் எனக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவது யார்? என வினவியுள்ளார். மேலும், US அதிபர் தேர்தல் நடைபெறும் நவ.5 வரலாற்றில் முக்கிய நாள் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News November 16, 2025

இதெல்லாம் ரூல்ஸ் கிடையாது… ஆனால், ஃபாலோ பண்ணணும்

image

சீனாவில் சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால், அதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றனர். காலங்காலமாக பின்பற்றப்படும் அந்த விதிமுறைகளில் சிலவற்றை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் எந்த விதிகள் உங்களை ஆச்சரியப்பட வைத்தது? SHARE

News November 16, 2025

10.5% இடஒதுக்கீடு கோரி போராட்டம்: ராமதாஸ்

image

TN-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி டிச.12-ல் போராட்டம் நடத்தவுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரிக்கையும் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.17-ல் அன்புமணி நடத்தும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்து தனக்கு தெரியாது என்று குறிப்பிட்ட ராமதாஸ், இப்போராட்டத்தால் தமிழகமே குலுங்கும் என்று பேசியுள்ளார்.

News November 16, 2025

Delhi Blast: காரின் உரிமையாளர் கைது

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரை சேர்ந்த ஒருவரை NIA கைது செய்துள்ளது. வெடித்த காரின் விவரங்களை கொண்டு NIA விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், அதன் உரிமையாளரான அமிர் ரஷித் அலி என்பவர் கைதாகியுள்ளார். இவர் குண்டுவெடிப்புக்கு காரணமான உமர் நபியுடன் இணைந்து தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!