News March 18, 2025
உலகை உலுக்கும் புகைப்படங்கள்.. கண்ணீர்

காசாவில் இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதலில் இதுவரை 300 பேர் இறந்துள்ளனர். எந்த பக்கம் திரும்பினாலும் சிறுவர்கள், பெண்கள் என அப்பாவி மக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறும் சத்தம் நெஞ்சை ரணமாக்குகிறது. இதுதொடர்பான <
Similar News
News March 19, 2025
நாக்பூர் கலவரம் திட்டமிட்ட சதி: பட்நாவிஸ்

நாக்பூரில் நிகழ்ந்த கலவரம் திட்டமிட்ட சதிச் செயல் என மஹாராஷ்டிரா CM தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கலவரம் குறித்து பேசிய அவர், அவுரங்கசீப்புக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க சாவா திரைப்படமே காரணம் என விளக்கம் அளித்தார். இக்கட்டான சூழலில் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார். கலவரம் பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
News March 19, 2025
4 பேர் தற்கொலைக்கு இதுதான் காரணமா?

சென்னையை சேர்ந்த டாக்டர் பாலமுருகன், தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. வட்டிக்கு கடன் வாங்கிய பாலமுருகனிடம், ஒரே நாளில் ரூ.1 கோடி தர வேண்டும் என கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால், ஒருநாளில் ரூ.1 கோடி திரட்ட முடியாததால், பயத்தில் குடும்பத்துடன் அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
News March 19, 2025
ஐபிஎல் சாம்பியன்கள் யார்-யார்?

2008 முதல் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளை பார்க்கலாம். *ராஜஸ்தான் ராயல்ஸ் (2008) *டெக்கான் சார்ஜர்ஸ் (2009)*சிஎஸ்கே (2010) *சிஎஸ்கே (2011)* கேகேஆர் (2012)*மும்பை (2013)*கேகேஆர் (2014)*மும்பை (2015)*ஹைதராபாத் (2016) *மும்பை (2017) *சிஎஸ்கே (2018) *மும்பை (2019 ) *மும்பை (2020) *சிஎஸ்கே (2021) *குஜராத் (2022) *சிஎஸ்கே (2023) *கேகேஆர் (2024).