News October 23, 2024
World record: T20-யில் 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

T20 WC Sub Regional Africa Qualifier Group B: காம்பியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. T20 வரலாற்றில் அதிகபட்ச ரன்களில் வெற்றிபெறுவது இதுவே முதல்முறை. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, 344 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய காம்பியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Similar News
News October 25, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீருடன் இறுதி அஞ்சலி

நடிகை மனோரமாவின் ஒரே மகனும் நடிகருமான பூபதி(70) சென்னையில் நேற்று காலமானார். அம்மா பயன்படுத்திய கட்டிலிலேயே அவரது உயிர் பிரிந்தது பெரும் சோகம். தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, பூபதி உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான பூபதி பல படங்களில் நடித்திருந்தார். RIP
News October 25, 2025
செல்வப்பெருந்தகையின் பேச்சு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர்

செம்பரம்பாக்கம் ஏரியை அத்தொகுதியின் MLA ஆன தன்னிடம் சொல்லாமல் திறந்ததற்காக நீர்வளத்துறை அதிகாரிகளை <<18077962>>செல்வப்பெருந்தகை<<>> சாடினார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை போன்ற கட்சி தலைவர்கள் கடுமையான பேசியது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். உண்மையை தெரிந்து கொண்டு அவர் பேச வேண்டும் எனவும், சின்ன சின்ன நீர் திறப்புகளுக்கு எல்லாம் MLA-வை கூப்பிடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
News October 25, 2025
இந்தியா அழுத்தத்திற்கு பணியாது: பியூஷ் கோயல்

அழுத்தத்திற்கு பணிந்து அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் அணுகுமுறை நீண்டகால தொலைநோக்கு பார்வையை கொண்டது எனவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வரிவிதிப்பை கடந்து செயலாற்றுவது எப்படி என யோசித்து வருவதாகவும், புதிய சந்தைகளை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


