News August 22, 2025

உலக சாதனை படைத்த பிரீட்ஸ்கி

image

ODI-யில், அறிமுகமான முதல் 4 போட்டிகளிலும் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை, தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி படைத்துள்ளார். முதல் போட்டியிலேயே சதம் அடித்த (150 vs NZ) அவர், அதன்பின் 83 vs பாக்., 57 vs ஆஸி., 88 vs ஆஸி (நேற்று) என 3 அரை சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன், இந்தியாவின் நவ்ஜோத் சிங் சித்து அறிமுகமானவுடன் தொடர்ந்து 4 அரை சதங்கள் (ஆனால் 5 போட்டிகள்) அடித்திருந்தார்.

Similar News

News March 13, 2026

சிலிண்டரில் இதை கவனிக்கவும்!

image

சிலிண்டரில் உள்ள குறியீடு, அதனை எப்போது வரை பயன்படுத்த முடியும் என்பதை காட்டுகிறது. A,B,C,D ஒவ்வொரு காலாண்டையும், எண்கள் ஆண்டையும் குறிக்கும். A(Jan/Feb/Mar), B(Apr/May/Jun), C(Jul/Aug/Sep), D(Oct/Nov/Dec). உதாரணமாக சிலிண்டரில் A-27 என்றால் மார்ச் – 2027 வரை பயன்படுத்தலாம். பழைய சிலிண்டரை பயன்படுத்தினால் பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, சிலிண்டரை வாங்கும்போது இதனை கவனிக்கவும்.

News March 13, 2026

சீட் பேரத்துடன் அதிமுகவில் இணைகிறாரா காளியம்மாள்?

image

நாதகவிலிருந்து விலகிய காளியம்மாள், இன்று அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும், 2026 தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை சீட் வழங்காவிட்டால், தேர்தலில் அதிமுக வெல்லும்பட்சத்தில் அவருக்கு ஏதாவது வாரியத் தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

News March 13, 2026

Gas charge ₹30.. அலறவிடும் சென்னை ஹோட்டல்ஸ்

image

வணிக சிலிண்டர் விலை உயர்வு & தட்டுப்பாட்டால் பெருநகரங்களில் உள்ள ஹோட்டல்களில் மெனு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் ‘Gas Charge’ என்று தனியாக ₹9.50 பில்லில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலும் சில ஹோட்டல்களில் ₹30 கேஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சில உணவகங்களில் ₹5 – ₹10 வரை உணவுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!