News December 21, 2024

8 வயதில் உலக சாதனை

image

சாதிக்க வயது தடையில்லை என்பதை இந்த 8 வயது சிறுமியின் அசாத்திய திறமை நிரூபிக்கிறது என்றால் அது மிகையாகாது. உடலை முறுக்கி செய்யக்கூடியது கமர் மரோதாசனம். இந்த ஆசனத்தை ஒரே நிமிடத்தில் சுமார் 45 முறை செய்துள்ளார் அந்த சிறுமி. அவரது இந்த முயற்சி, International, Worldwide, International Yoga ஆகிய 3 உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது. இதையடுத்து சாதனை சிறுமிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Similar News

News September 9, 2025

செங்கோட்டையன் புதிய அதிமுக: செல்வப்பெருந்தகை

image

இபிஎஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் திடீர் திருப்பமாக டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், பாஜக எங்கெல்லாம் உறவு வைக்கிறார்களோ, அங்கே எல்லாம் கூறு போடுவது தான் வழக்கம் என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். ஏற்கெனவே அதிமுகவை நான்காக வைத்து இருக்கிறார்கள் இப்போது ஐந்தாவது அதிமுகவாக செங்கோட்டையன் தலைமையில் உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.

News September 9, 2025

ஜெருசலேம் பயங்கரவாத தாக்குதல்: மோடி கண்டனம்

image

இஸ்ரேல், ஜெருசலேமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் (6 பேர்) குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதத்தை எந்த வடிவங்களிலும், ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையில் இந்தியா உறுதியாக நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

ராசி பலன்கள் (09.09.2025)

image

➤ மேஷம் – ஏமாற்றம் ➤ ரிஷபம் – வெற்றி ➤ மிதுனம் – கவலை ➤ கடகம் – லாபம் ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – தடங்கல் ➤ துலாம் – மகிழ்ச்சி ➤ விருச்சிகம் – தாமதம் ➤ தனுசு – சுகம் ➤ மகரம் – வரவு ➤ கும்பம் – சிக்கல் ➤ மீனம் – அசதி.

error: Content is protected !!