News August 25, 2024
பொன்னாக்குடியில் உலகத் தர வாய்ந்த சிகிச்சை மையம்

பொன்னாகுடியில் ஸ்காட் மருத்துவ மையம் மற்றும் ஹைதராபாத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒமேகா கேன்சர் கேர் நிறுவனம் இணைந்து புற்று நோய்க்கு உலகத்தரம் வாய்ந்த அதி நவீன சிகிச்சை மையத்தை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக அந்நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவர் மோகனா வம்சி இன்று தெரிவித்தார். வெளிநாடுகளில் புற்று நோய்க்கு உள்ள அனைத்து நவீன சிகிச்சை முறைகளும் திருநெல்வேலி மக்களுக்கு கிடைக்கும்.
Similar News
News December 5, 2025
நெல்லை முக்கிய ரயில் சேவை நீட்டிப்பு

நெல்லையில் இருந்து டிசம்பா் 7ம் தேதி முதல் ஜனவரி 25-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும். நெல்லை – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து டிசம்பா் 8ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு ஒரு நாள் காலை 7:45க்கு நெல்லை வரும்.
News December 5, 2025
நெல்லை: 10th தகுதி., மத்திய அரசில் 25487 காலியிடங்கள்! APPLY

நெல்லை மக்களே, மத்திய அரசின் 25487 Constable (GD) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <
News December 5, 2025
நெல்லை ரயிலில் 15 கிலோ கஞ்சா

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் நேற்று இரவு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அங்கு கேட்பாரற்றிருந்த 3 பைகளை கைப்பற்றினர். அதில் 15 கிலோ எடை உள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை கொண்டு வந்தவர் யார்? எங்கே கொண்டு செல்லப்பட்டது என விசாரணை.


