News September 12, 2025
மோதும் உலக சாம்பியன்கள்: இது ஒரு வரலாற்று தருணம்!

செஸ் விளையாட்டில் ஆண்கள் உலக சாம்பியனான டி.குகேஷ், பெண்கள் உலக சாம்பியனான திவ்யா தேஷ்முக் இருவரும் இன்று கிராண்ட் ஸ்விஸ் போட்டியில் மோதுகின்றனர். இருவருக்கும் 19 வயது, இந்தியர்கள், தங்களை விட அதிக ரேட்டிங்கில் இருக்கும் வீரர்களை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனவர்கள் – இப்படி பல ஒற்றுமைகள் கொண்ட இரு மாபெரும் சாதனையாளர்கள் மோதும் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 12, 2025
இவர்களுக்கு ₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணையவே, புதிதாக பலரும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவது தாமதமாகி வருகிறது. இதனால், உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர். புதிதாக ₹1,000 பெறுபவர்களின் பட்டியல் செப்.15-ல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்காதவர்கள் இந்த முறை ₹1,000 பெற வாய்ப்பில்லை. SHARE IT.
News September 12, 2025
Beauty Tip: பிம்பிள்ஸ் பிரச்னைக்கு சிம்பிள் தீர்வு!

என்ன செய்தாலும் முகத்தில் உள்ள பிம்பிள்கள் மறைய மாட்டேங்குதா? இதை செய்தால் 2 வாரங்களில் பிம்பிள் எல்லாம் மறைந்துவிடும். ➤ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி & சிவப்பு சந்தன பொடியை எடுத்துக்கொள்ளுங்கள் ➤இரண்டையும் சேர்த்து நீர்விட்டு பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவவும் ➤15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். வாரத்தில் 3 முறை இதை செய்துவந்தால் முகத்தில் உள்ள பிம்பிள் மறையும். SHARE.
News September 12, 2025
கொள்ளை சிரிப்பில் தங்கப்பூ!

கன்னட படத்தில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார் ருக்மினி வசந்த். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கலர் கலரான டிரெஸ்களில், கொள்ளை கொள்ளும் சிரிப்பில் அவர், விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். மேலே Swipe செய்து நீங்களும் அந்த ‘தங்கப்பூவை’ பாருங்கள்.