News September 18, 2025
WA: நீரஜ் ஏமாற்றம்… பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது

உலக தடகள சாம்பியன்ஷிப், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார். இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 84.03மீ ஈட்டி எறிந்து 8வது இடம் பிடித்தார். ஒரு முறை கூட அவர் 85மீ தாண்டி ஈட்டி எறியவில்லை. கடந்த முறை தங்கம் வென்றிருந்த நீரஜ், இம்முறை பதக்கமின்றி திரும்புவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீம் 10வது இடமே பிடித்தார்.
Similar News
News March 7, 2026
BREAKING: சம்பள உயர்வு.. அறிவித்தது தமிழக அரசு

மே மாதம் முதல் மருத்துவத் துறையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதன் மூலம், 41,000 ஊழியர்களுக்கு 2026- 27-ம் ஆண்டுக்கான ஊதியம் உயர்த்தப்படும் என்றும் இதன்மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ₹169 கோடி செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு ஊதிய உயர்வு என்ற விவரங்களுடன் விரைவில் அரசாணை வெளியாகும்.
News March 7, 2026
EPS-ன் பொதுச் செயலாளர் பதவியை பாஜக பறிக்கும்: CM

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு பாஜகவால் ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு EPS-க்கு பதில் வேறு ஒருவரை பாஜக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. EPS-ஐ இந்த தேர்தல் வரைக்கும்தான் பாஜக பொறுப்பில் வைத்திருக்கும். ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் இப்போதே அவர் பதவி பறிபோயிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காது: மத்திய அரசு

நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்காது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளதாகவும், போதுமான எண்ணெய் இருப்பு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றும் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்காது என்றும் உறுதியாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


