News March 17, 2024
விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சி, கொளப்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவர் நேற்று மாலை கொளப்பாக்கத்திலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் “செப்டிக் டேங்க்” சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது விஷவாயு தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கிளம்பாக்கம் போலீசார் தேவராஜின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 5, 2026
செங்கை: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு!

செங்கல்பட்டு அடுத்த பழமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாவேந்திரன் (25) என்பவர், வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆலப்பாக்கம் அருகே கார் பழுதாகி நின்ற நிலையில், மீண்டும் இயக்க முயன்றபோது திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாகியது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 5, 2026
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் ஜன (4) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.