News December 2, 2025
‘Word of the Year’ இது தான்!

2025-ம் ஆண்டின் ’Word of the Year’ ஆக ‘Rage bait’ என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது. aura farming, biohack உள்ளிட்ட வார்த்தைகளும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இறுதியாக, பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் Rage bait தேர்வு செய்யப்பட்டுள்ளது. வியூஸ்களை அதிகரிக்க கோபம், வெறுப்பை தூண்டும் வகையில் உருவாக்கப்படும் SM கன்டென்ட் Rage bait எனப்படுகிறது.
Similar News
News December 3, 2025
20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் எடுத்த முடிவு!

கடந்த 20 ஆண்டுகளாக எந்த விளம்பர படங்களிலும் நடிக்காமல் இருந்த அஜித், அந்த முடிவை மாற்றியுள்ளாராம். Campa Cola & ஒரு பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர படங்களில் அவர் நடிக்கவுள்ளாராம். கடைசியாக 2005-ல் Sunrise காபி விளம்பரத்தில் அஜித் நடித்திருந்தார். அஜித் குமார் ரேஸிங்கின் விளம்பரதாரராக ரிலையன்ஸ் செயல்படவுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் Campa Cola விளம்பரத்தில் அஜித் நடிக்கிறார்.
News December 3, 2025
ATM கார்டில் உள்ள இந்த 16 எண்கள் அர்த்தம் தெரியுமா?

✦ATM கார்டில் உள்ள முதல் எண், அதை வழங்கும் தொழில்துறையுடன் தொடர்பு கொண்டது. அதாவது, பேங்கிங், பெட்ரோலியம், ஏர்லைன் இவற்றில் எது என்பதை குறிக்கும் ✦அடுத்த 5 எண்கள், கம்பெனியை குறிக்கிறது. VISA, Mastercard, Maestro போன்றவை ✦7-15 வரையான நம்பர்கள், பேங்க் அக்கவுண்ட்டுடன் தொடர்புடையது. ஆனால், அக்கவுண்ட் நம்பரும் இதுவும் ஒன்றாக இருக்காது ✦கடைசி நம்பர் Luhn algorithm முறையில் கம்ப்யூட்டரில் உருவாவது.
News December 3, 2025
BREAKING: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை

கனமழை எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


