News January 1, 2025
டைவர்ஸ் தொல்லையால் Woodbox Cafe சிஇஓ குரோனா தற்கொலை

பெங்களூரு <<14885192>>IT மேன் சுபாஷின்<<>> சோக வடு மறைவதற்குள், அதேபோல் நடந்த பிரச்னையில் Woodbox Cafe சிஇஓ புனீத் குரோனா தற்கொலை செய்து கொண்டுள்ளார். 2016இல் மணிகா என்பவருடன் திருமணமான நிலையில் டைவர்ஸ் வழக்கு நடந்து வருகிறது. Woodbox Cafe யாருக்கு சொந்தம் என்பதில் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இதில், குரானாவை மணிகா மிரட்டுவது உள்ளிட்ட 16 நிமிட ஆடியோ, வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 561 ▶குறள்: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. ▶பொருள்: நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.
News December 26, 2025
விரைவில் புதிய மெயில் ஐடி.. கூகுளின் முக்கிய முடிவு

ஜிமெயில் பயனர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றிக்கொள்ளும் புதிய வசதி விரைவில் வழங்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. முகவரியை மாற்றுவதால் பயனரின் எந்தத் தரவுகளும் (மின்னஞ்சல்கள், புகைப்படங்கள்) பாதிப்படையாது. இருப்பினும், பயனர்கள் தனது ‘@gmail.com ஐடி’யை ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப், ஆதார் ஆகியவற்றுடன் இணைத்திருந்தால், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News December 26, 2025
SMAT தொடரில் SMART ஆக வேலை செய்த தோனி

SMAT தொடர் தொடங்கியது முதலே தோனியின் ஆலோசனைகளை பெற்று வந்ததாக ஜார்க்கண்ட் கிரிக்கெட் வாரியத்தின் து.செயலாளர் சபாஷ் நதீம் கூறியுள்ளார். SMAR தொடரை முழுமையாக பின்பற்றிய தோனி, வீரர்களின் பலம், பலவீனங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப ஆலோசனைகளையும் வழங்கினார் என்றார். மொத்தமாக தங்கள் அணி வளர்வதற்கு தேவையானவற்றை செய்ய தோனி மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும் நதீம் தெரிவித்துள்ளார்.


