News September 5, 2025

மகளிர் உலகக் கோப்பை டிக்கெட் ₹100 மட்டுமே!

image

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் செப்.30-ல் தொடங்குகிறது. இந்நிலையில், இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத வகையில், லீக் ஆட்டங்களுக்கு டிக்கெட் விலை ₹100 என மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட்டை காண வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீங்களும் டிக்கெட் புக் செய்ய இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

Similar News

News March 9, 2026

சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான கவுரி சாம்ப சிவராவ்(82) காலமானார். உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. 5 முறை லோக் சபா MP ஆக பணியாற்றிய அவர், 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஜவுளித் துறை அமைச்சராக பதவி வகித்தார். கவுரி சாம்ப சிவராவ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 9, 2026

சற்றுமுன்: விஜய் கொந்தளித்தார்

image

தமிழகத்தில் நடந்த 5 குற்ற சம்பவங்களை சுட்டிக் காட்டி TN அரசுக்கு விஜய் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை ஆகாஷ் மரணம், நாமக்கல் சிறுமி ரேப் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுள்ள தவெக, இது தமிழகமா (அ) சுடுகாடா என்றும் திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாகவும் சாடியுள்ளது. மேலும், ரத்த ஆறாக ஓடும் தமிழகம் இன்று கண்ணீரில் மிதக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

News March 9, 2026

திமுக ஆண்டது போதும்.. மக்கள் மாண்டது போதும்: EPS

image

TN-ல் தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்ற செய்திகள் அச்சத்தை அதிகரித்துள்ளதாக EPS பதிவிட்டுள்ளார். நாங்குநேரி இரட்டை கொலை முதல் தென்காசி விவசாயி கொலை வரை பட்டியலிட்ட அவர், TN-ல் திமுக ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும் என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ஆட்சியில் இருக்கும் கொஞ்ச நாள்களிலாவது சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!