News October 12, 2025

மகளிர் WC: ஆஸ்திரேலியாவுக்கு 331 ரன்கள் டார்கெட்

image

மகளிர் உலககோப்பை லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி 331 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணிக்கு பிரதிகா ராவல்(75) மற்றும் ஸ்மிருதி மந்தனா(80) அரைசதம் அடித்து வலுவான தொடக்கம் கொடுத்தனர். பின்னர் வந்த வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினாலும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி 48.5 ஓவர்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய தரப்பில் அன்னபெல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Similar News

News October 12, 2025

தாம்பத்யம் சிறக்க சிறந்த உணவுகள்

image

‘தாம்பத்யம்’ என்பது கணவன் – மனைவி இடையே இருக்கும் ஒரு ஆரோக்கியமான உறவு. இந்த உறவு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இருவருக்கும் ஒரு வித புத்துணர்ச்சியையும், புதிய சிந்தனைகளுக்கும், தெளிவான மனதிற்கும் பெரிதும் உதவுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, ஆரோக்கியமான, திருப்திகரமான தாம்பத்ய உறவை மேற்கொள்ள உதவும் உணவுகளை மேலே swipe செய்து பாருங்கள். உங்கள் பார்ட்னருக்கும் ஷேர் பண்ணுங்க.

News October 12, 2025

தீவிரவாதிகளின் புகலிடமாக பாக்., உள்ளது: தாலிபன் அரசு

image

ஆப்கன் அமைச்சர் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், பாக்., – ஆப்கன் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் இருநாட்டு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாக்.,கின் கைபர் பக்துன்வா, பலூசிஸ்தான் மாகாணங்களில் ISIS தீவிரவாத மையங்கள் செயல்படுவதாக தாலிபன் அரசு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாக்., உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

News October 12, 2025

நாளை முதல் பள்ளிகளில் தீபாவளி விழிப்புணர்வு

image

தீபாவளியையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதில், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். நாளை முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளிலும் நடைபெற உள்ளது. SHARE IT

error: Content is protected !!