News October 5, 2025

Pak-க்கு Handshake செய்யாமல் சென்ற மகளிர் அணி

image

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாக்., கேப்டன் ஃபாத்திமாவுக்கு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கைகுலுக்காமல் சென்றுள்ளார். இதேபோல, Asia Cup-ல் PAK அணியினருக்கு இந்திய வீரர்கள் கைக்கொடுக்காமல் போனது பெரும் சர்ச்சையானது. இதற்கு விளையாட்டில் அரசியல் வேண்டாம் என்ற கருத்துகள் எழுந்தன. இந்நிலையில் மகளிர் அணியும் இப்படி செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

Similar News

News March 28, 2026

CINEMA 360°: SK-க்கு தங்கையாக மாளவிகா மனோஜ்?

image

▶ SK-க்கு தங்கையாக மாளவிகா மனோஜ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.
▶ ‘தி டார்ம்’ படத்தில் முனிஷ்கான் கதை நாயகனாக களமிறங்குகிறார்.
▶ ‘யூத்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ₹28 கோடி வசூல் செய்துள்ளதாம்.
▶ தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

News March 28, 2026

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

image

ஈரானின் அராக் கனநீர் அணு உலை மற்றும் அர்தகான் யுரேனியம் ஆலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான முக்கிய உள்கட்டமைப்புகளை அழிப்பதே இதன் நோக்கம் என்று இஸ்ரேல் கூறியது. இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளோ அல்லது கதிர்வீச்சு அபாயங்களோ இல்லை என்று ஈரான் தெரிவித்த ஈரான், இதற்கு பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

News March 28, 2026

பர்கர் நிறுவன ஊழியர்களுக்கு ₹15 கோடி போனஸ்!

image

அமெரிக்க பர்கர் நிறுவனமான Five Guys, தனது ஊழியர்களுக்கு ₹15 கோடி போனஸ் அறிவித்துள்ளது. தனது 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 17-ல் அறிவிக்கப்பட்ட ‘But One Get One Free’ சலுகைக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. அப்போது ஏற்பட்ட கூட்டத்தால் சரக்கு பற்றாக்குறை, ஆன்லைன் சேவைகள் முடங்குதல் போன்ற சவால்கள் ஏற்பட்டன. இருப்பினும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 1,500 ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

error: Content is protected !!