News April 14, 2024
#மகளிர்உரிமைத்தொகை_ரூ.1000_வரவில்லை

நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுத்ததை திமுக விளம்பரமாக வெளியிடுகிறது. நாளை அனைத்து மகளிரின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்படவுள்ள நிலையில், அனைவருக்கும் ஆயிரம் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தகுதி பார்ப்பதாக கூறி மகளிரை நிராகரித்து திமுக ஏமாற்றுவதாக #வரல_ஆயிரம் என நூதனமான முறையில் அதிமுக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
விஜய் அதிரடி முடிவு.. திமுக, அதிமுக அதிர்ச்சி

கொங்கு மண்டலத்தில் வாக்கு வங்கியை தக்க வைக்க அதிமுகவும், எப்படியாவது செல்வாக்கு பெற வேண்டும் என திமுகவும் போட்டிப்போட்டு களப்பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு அதிர்ச்சியளிக்க, விஜய் திட்டம் தீட்டி வருகிறார். டிச.16 அன்று ஈரோட்டில் நடக்கும் தவெக பொதுக்கூட்டம் அதற்கு அச்சாரமிடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செங்கோட்டையனின் மூலம் கொங்கு மண்டலத்தில் தவெகவை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம்.
News December 8, 2025
‘என் சாவுக்கு பிறகு இதை செய்யுங்கள்’.. பெரும் சோகம்

வாணியம்பாடியில் ரயில் முன் பாய்ந்து, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி சந்திரசேகரன்(76) தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணமாகாத அவர், கவனிக்க ஆளில்லாததால் சோக முடிவை எடுத்துள்ளார். அவரது வீட்டில் இருந்து தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், இறுதி சடங்குக்கு ₹25,000 வைத்திருப்பதாகவும், வீட்டை சர்ச்சுக்கு எழுதி வைத்திருப்பதாகவும் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார். கொடிது கொடிது முதுமையில் தனிமை கொடிது!
News December 8, 2025
பள்ளி, கல்லூரி மாணவிகளை கர்ப்பமாக்கிய இளைஞர்

ஊட்டியை சேர்ந்த பிரவீன், 10-ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவருடன் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கியுள்ளார். அதேநேரத்தில், கல்லூரி மாணவி ஒருவருடனும் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவியை திருமணம் செய்த நிலையில், பள்ளி மாணவியை விட்டு பிரவீன் விலகியுள்ளார். தற்போது, பள்ளி, கல்லூரி மாணவிகள் இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயம் வெளியே தெரியவர, போக்சோவில் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.


