News May 7, 2025
மகளிர் உரிமைத்தொகை.. அமைச்சரின் சூப்பர் அப்டேட்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணி ஜூன் 4-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட தகுதி அடிப்படையில் ₹1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இதற்காக, TN முழுவதும் 9,000 இடங்களில் முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News November 28, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. உறுதி செய்தார்!

CM வேட்பாளர் விஜய் என்ற நிலைப்பாட்டிலேயே தற்போது வரை தவெக உள்ளது. செங்கோட்டையன் கட்சியில் சேருவதற்கு முன்பு விஜய்யிடம் பேசியபோதும், இதே நிலையில் நீடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே திமுகவும், அதிமுகவும் ஒன்று என நேற்று அவர் பேசியிருந்தார். இதனால், அதிமுக கூட்டணியில் விஜய் இணையலாம் என்ற பேச்சுகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தவெகவினர் கூறுகின்றனர்.
News November 28, 2025
உக்ரைன்-ரஷ்யா போர்: அடம் பிடிக்கும் புடின்

உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட <<18381416>>திருத்தப்பட்ட அமைதி திட்டத்தை<<>> புடின் நிராகரித்துள்ளார். போர் நிறுத்தப்பட வேண்டுமெனில், உக்ரைன் வசம் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை கண்டிப்பாக ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புடினின் இந்த பிடிவாதத்தால், போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் இழுபறியாகவே நீடித்து வருகிறது.
News November 28, 2025
காலை உணவில் கட்டாயம் இது இருக்கணும்..

காலை உணவில் தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ப்ரோ-பயோடிக் இருப்பதால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை இது அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை குறையும், வயிற்று பிரச்னைகள் வராது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், நல்ல மனநிலையில் இருப்பீர்கள், மூளை செயல்பாடு நன்றாக இருக்கும் என டாக்டர்கள் சொல்கின்றனர். மொத்தத்தில் உங்கள் முழு உடலையும் பாதுகாக்கும் சூப்பர் ஃபுட்டாக தயிர் செயல்படுகிறது. SHARE.


