News August 5, 2025
மகளிர் உரிமைத் தொகை.. விண்ணப்பத்தின் நிலை என்ன?

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பங்களின் நிலையை அறிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. kmut.tn.gov.in என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது ஆதார் எண்ணை உள்ளிடவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP வரும். அதனை உள்ளிட்டு உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? என அறியலாம். SHARE IT.
Similar News
News August 5, 2025
‘கிங்டம்’ படத்தை தடை செய்க: வைகோ

‘கிங்டம்’ படத்தை தமிழகத்தில் திரையிடுவதை தடை செய்ய வேண்டுமென வைகோ தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் கிங்டம். இப்படத்தில் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து இலங்கை சென்றவர்களை ஈழ தமிழர்கள் அடிமைகளாக நடத்துவது போன்ற காட்சிகள் உள்ளன. ஈழ தமிழர்களை தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிடுவது வரலாற்றை சிதைக்கும் முயற்சி என வைகோ சாடியுள்ளார்.
News August 5, 2025
கில் அல்ல, சிராஜ் தான் மெக்கல்லம் சாய்ஸ்: டி.கே

ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரின் நாயகன் விருது கில், ப்ரூக்கிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் சிராஜை தொடர் நாயகனாக அறிவிக்க மெக்கல்லம் விரும்பினார் என DK தெரிவித்துள்ளார். ஆட்டம் 4-ம் நாளில் முடிந்திருந்தால் கில் தான் அவருடைய சாய்ஸ். ஆனால் 5-ம் நாளுக்கு பின் சிராஜை தேர்வு செய்ய மெக்கல்லம் முயன்றதாகவும், ஆனால் கில்லுக்கு விருது வழங்குவதற்கான ஏற்பாடுகள் 4-ம் நாளே தயாராகிவிட்டதாக தெரிவித்தார்.
News August 5, 2025
24 வயதில் ₹2200 கோடி சம்பளம்: மார்க் வியந்த இளைஞர்

AI நிபுணரான Matt Deitke என்ற இளைஞர், 4 ஆண்டுகளுக்கு பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ₹2194 கோடி! AI சூப்பர் இன்டலிஜன்ஸ் நுட்பத்தில் ஆதிக்கம் செய்ய, அத்துறை நிபுணர்களுக்கு வலைவீசி வரும் மெட்டா நிறுவனம், Matt-க்கு ₹1097 கோடி சம்பளம் தர முன்வந்தபோது, அவர் ஏற்கவில்லை. பின் மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பர்க் நேரில் சந்தித்து சமாதானம் செய்தபின், ₹2194 கோடி சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டாராம். திறமை!