News March 29, 2025
மகளிர் உரிமைத் தொகை: தகுதிகளை தளர்த்த கோரிக்கை

மகளிர் உரிமைத் தொகை திட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகப் பேரவையில் பேசிய எம்.எல்.ஏ ஜெயக்குமார், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் கடுமையாக உள்ளதால் ஏராளமான பெண்கள் இதனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அதிமுகவின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?
Similar News
News April 1, 2025
ராசி பலன்கள் (01.04.2025)

➤மேஷம் – ஓய்வு ➤ரிஷபம் – நட்பு ➤மிதுனம் – புகழ் ➤கடகம் – சிரமம் ➤சிம்மம் – சினம் ➤கன்னி – ஆதாயம் ➤துலாம் – கவனம் ➤விருச்சிகம் – பாசம் ➤தனுசு – பகை ➤மகரம் – உதவி ➤கும்பம் – பாராட்டு ➤மீனம் – நிறைவு.
News April 1, 2025
‘குட் பேட் அக்லி’ ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்?

அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் என அனைத்தும் வரவேற்பை பெற்றதால், ட்ரெய்லர் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஏப். 3-ஆம் தேதி ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப். 10-ல் ரிலீசாகும் குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
News April 1, 2025
இரவில் பல் துலக்குவது அவசியமா?

ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை எழுந்தவுடன் ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை. ஆனால், நம்மில் பலர் காலையில் பல் துலக்குவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், இரவு தூங்குவதற்கு முன் துலக்குவது மிக அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அப்போதுதான், நாம் சாப்பிட்ட உணவின் மிச்சங்கள் பற்களில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்.