News April 15, 2025
மகளிர் உரிமைத் தொகை: வங்கி கணக்கை செக் பண்ணுங்க

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் 20-வது தவணை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சற்றுமுன் வரவு வைக்கப்பட்டது. ஒரு கோடியே 6 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஏப்ரல் மாதத்திற்கான ₹1,000 செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ₹10,600 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான நபர்களைச் சேர்க்க விரைவில் விரிவாக்க அறிவிப்பு வெளியாகவுள்ளது. உங்கள் குடும்பத்திற்கு ₹1000 வருகிறதா?
Similar News
News January 5, 2026
தவாகவில் இருந்து தவெகவுக்கு தாவுகிறார்!

தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து வெளியேறிய ஜெகதீச பாண்டியன் தவெகவில் இணையவுள்ளார். நாதகவில் இருந்து வெளியேறி தவாகவில் இணைந்த இவர், சீமானை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் தமிழ் தேசியம் பேசுவதால் சீமானை நண்பனாக கருதும் வேல்முருகனுக்கு இது பிடிக்காததால், விமர்சிக்க வேண்டாம் என ஜெகதீசனுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு அவர் உடன்பட மறுத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
News January 5, 2026
KKR-க்காக ₹4,000 கோடி செலவழிக்கும் ஷாருக்!

KKR அணியை கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றும் எண்ணத்தில், ஷாருக்கான் சுமார் ₹4,000 கோடி செலவழிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. KKR அணி உரிமத்தில் தற்போது, ஷாருக்கிடம் 55% பங்குகளும், மெஹ்தா குரூப்பிடம் 45% பங்குகளும் உள்ளன. மெஹ்தா குரூப்பிடம் இருந்து 35% பங்குகளை சுமார் ₹4,000 கோடியை கொடுத்து ஷாருக்கான் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அணியின் உரிமத்தில் அவரின் பங்குகள் 90% ஆக அதிகரிக்கும்.
News January 5, 2026
கருப்பையிலிருந்து 16 கிலோ ராட்சத கட்டி அகற்றம்!

டெல்லியைச் சேர்ந்த 30 வயது பெண்ணின் கருப்பையிலிருந்து 16 கிலோ எடையுள்ள ஒரு ராட்சத நார்த்திசுக் கட்டியை பரிதாபாத் தனியார் ஹாஸ்பிடல் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். பொதுவாக 1,000 பெண்களில் ஒருவருக்கு மட்டுமே 10 கிலோவுக்கு மேல் கட்டி வளரும் என்றும், பெண்கள் அவ்வபோது தங்களது உடலை பரிசோதனை செய்து கொள்வதோடு, நோயின் அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.


