News August 8, 2025
மகளிர் உரிமைத் தொகை.. இதனை மறக்க வேண்டாம்!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தில் சில தகவல்களை பூர்த்தி செய்யாமல் சிலர் விட்டுவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டு எண், பேங்க் அக்கவுண்ட் எண், IFSC Code, ஆதார் எண் உள்ளிட்டவற்றை சரியாக பூர்த்தி செய்து, அதற்கான அசல் சான்றிதழ்களை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தகவல்களை பூர்த்தி செய்வதில் சிலர் தவறு செய்வதாக குறிப்பிட்டுள்ள அரசு, முறையாக பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News August 9, 2025
ராகுலுக்கு ரெண்டே ஆப்ஷன்ஸ்: தேர்தல் ஆணையம்

‘வாக்கு திருட்டு’ என்ற கருத்தில் வாக்காளர் பட்டியலில் பல முறைகேடுகள் இருப்பதாக கூறி, பல்வேறு குற்றச்சாட்டுகளை ECI மீது வைத்திருந்தார் ராகுல் காந்தி. இதற்கு பதிலளித்துள்ள ECI தரப்பு, ஒன்று, தான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று கைப்பட எழுதி கையெழுத்திட்டு தரவேண்டும் (அ) தான் கூறியது தவறு என மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுலுக்கு இரண்டே ஆப்ஷன்கள் தான் என்று கூறியுள்ளது. இது சரியா?
News August 9, 2025
மீண்டும் சீரியலில் ஸ்மிருதி… ஒரு எபிசோடுக்கு ₹14 லட்சமா!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். தற்போது ‘Kyunki Saas Bhi Kabhi Bahu Thi Season-2’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதில் தனது நடிப்புக்கு அவர் ஒரு எபிசோடுக்கு ₹14 லட்சம் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவி சீரியலில் இது நடிகைக்கான அதிகபட்ச சம்பளம் என்கின்றனர். ஆனால், இதுகுறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.
News August 9, 2025
பெண்களுடன் சாட்டிங்… ₹9 கோடியை இழந்த முதியவர்

மும்பையில் காதல் சாட்டிங் மோகத்தில் 80 வயது முதியவர் ஒருவர் ₹9 கோடியை இழந்துள்ளார். இவருக்கு வாட்ஸ்ஆப்பில் பெண்கள் பெயர்களில் சிலர் அறிமுகமாகி, அவருடன் ரொமான்ஸ் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏமாந்த அவர், அவர்களுக்கு 734 முறை தன் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் ₹8.7 கோடி பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார். இப்போது கைச்செலவுக்கு குடும்பத்தினரை அணுக, அவர்கள் விசாரித்தபோது உண்மை வெளிவந்துள்ளது.