News April 16, 2025
ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 27, கார்த்திகை 11 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 12:00 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம் ▶சிறப்பு: தென்னை, மா, பலா, புளி வைக்க நல்ல நாள். ▶வழிபாடு: குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுதல்.
News November 27, 2025
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துகிறதா இந்தியா?

<<18371900>>ஷேக் ஹசீனாவை<<>> நாடு கடத்துவது தொடர்பாக, வங்கதேசத்தின் கோரிக்கை ஆராயப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதி விவகாரங்கள், சட்ட செயல்முறைகளின் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளது. மேலும், வங்கதேசத்தின் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மேம்பட இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News November 27, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


