News December 13, 2024

நாளை மறுநாள் மகளிர் உரிமைத்தொகை

image

மகளிர் உரிமைத்தொகை ₹1000 நாளை மறுநாள் (டிச.15) தகுதியான அனைத்து பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. கடந்த மாதம் வரை 1.15 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 1.14 கோடி பேருக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. அதிக வருமானம், அரசு பணிகள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 1.27 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News April 4, 2026

உஜ்வாலா பயனாளிகளுக்கு சிக்கல் இல்லை

image

மேற்காசிய போரினால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு விலையும் அதிகரித்தது. போர் தொடர்ந்து வருவதால் சிலிண்டர் விலை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. ஆனால், PM உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகளுக்கு ₹300 தள்ளுபடியுடன், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டருக்கு எந்த பிரச்னையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்திட்டத்தில் பயன்பெறும் கிராமப்புற மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

News April 4, 2026

வெறும் வயிற்றில் மது குடித்தால்…

image

மது பிரியர்கள் சில டிப்ஸ் மூலம் ஆல்கஹாலால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். *குறைந்த நேரத்தில் அதிக மது குடிப்பதை தவிர்க்க வேண்டும். *மது போதையில் இருக்கும்போது புகைப் பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. *வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. *2 (அ) அதற்கு மேலான மது வகைகளை மிக்ஸ் செய்து குடிப்பதை கைவிடவும். *இப்படி செய்தால் ஹேங்க் ஓவர், உடல்நலப் பிரச்னையை தடுக்கலாம். SHARE

News April 4, 2026

திருமாவளவனுக்கு மாற்றாக ஜோதிமணி.. யார் இவர்?

image

காட்டுமன்னார்கோவிலில் <<19567832>>திருமாவளவன் அறிவித்துள்ள வேட்பாளர் <<>>ஜோதிமணி, விசிக உறுப்பினர் அல்ல என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸில்(காங்., EX தலைவர் இளையபெருமாளின் மகன்) இருக்கும் அவருக்கு இது இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. விசிக (அ) காங்., எந்த சின்னத்தில் போட்டி என தெரியவில்லை என சற்றுமுன் பேட்டியளித்துள்ளார். ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிப்பில் விசிக நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளதாக பேச்சு உள்ளது.

error: Content is protected !!