News January 24, 2025
மகளிர் உரிமைத் தொகை…. விரைவில் முக்கிய அறிவிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை TN அரசு செயல்படுத்தி வருகிறது. 1.14 கோடி பேர் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இன்னும் சிலர் விண்ணப்பித்து காத்து கிடக்கின்றனர். இதை கவனத்தில் வைத்து அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என உதயநிதி அண்மையில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை விரைவில் CM ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 18, 2025
உங்க தூக்கத்த கெடுத்தது யாரு?

‘படுத்த உடனே தூங்குறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்’ என்று உங்களை பார்த்து ஒருவர் கூறினால், நீங்கள்தான் இன்று அதிர்ஷ்டசாலி. ஏனென்றால், இரவில் தூக்கம் வராமல் பலரும் அவதிப்படுகின்றனர். இதற்கு மதிய நேர குட்டி தூக்கம் ஒரு காரணமாக அறியப்பட்டாலும், வேறு சில காரணங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான 5 காரணங்களை மேலே உள்ள படங்களில் Swipe செய்து பாருங்கள். நீங்கள் சந்திக்கும் இடர்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News September 18, 2025
ஆசிய கோப்பை: AFG முதலில் பேட்டிங்

ஆசிய கோப்பையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. பேட்டிங்கில் இலங்கையும், பந்துவீச்சில் ஆப்கானிஸ்தானும் வலுவாக காணப்படுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் ஆப். அணி வெற்றிபெறுவது அவசியம், தோற்கும் பட்சத்தில் குரூப் B-ல் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, வங்கதேச அணிகள் முன்னேறிவிடும். குரூப் B-ல் இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன.
News September 18, 2025
BREAKING: தவெகவில் முக்கிய மாற்றம் செய்த விஜய்

தவெகவில் நிர்வாக ரீதியாக சில மாற்றங்களை செய்து விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, CTR நிர்மல்குமாருக்கு இணை பொதுச்செயலாளர் பொறுப்புடன் ஐடி விங், வழக்கறிஞர் அணியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகனுக்கு ஊடக அணி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், விஜயலட்சுமி, அருள்பிரகாசம், ஸ்ரீதரன், சுபத்ரா ஆகிய 4 பேர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.