News February 16, 2025
மகளிர் உரிமைத் தொகை.. மே மாதத்திற்குள் புதியவர்கள்

1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் மேலும் சிலர் புதிதாக இணைய காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், மே மாதத்திற்குள் புதியவர்களை சேர்க்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 27, 2025
பாதாம் கீராக மனதை குளிர்விக்கும் கீர்த்தி ஷெட்டி

ஓரப்பார்வையே ஒரு இரவு தூக்கத்தை கெடுக்கும், ஆனால் மணம் கொண்ட தலைமுடியில் பாதி மறைந்தும் மறையாமலும் அவள் பார்க்கும் வெட்கம் கொண்ட பார்வையோ தூக்கமே இல்லாமல் ஆக்கிவிடும் போல. கண்ணாடியாய் மின்னும் கன்னங்களுக்கு பின்னே ஒளிந்துகொண்டு சிறிய ஒளியாய் மின்னும் கம்மல் கூட அவளை ஒய்யாரமாக காட்டுகிறது. இந்த பால் வண்ண நிலவான கீர்த்தி ஷெட்டியின் பேரழகைக் காண மேலே உள்ள போட்டோஸை swipe செய்து பாருங்கள்.
News October 27, 2025
திமுகவுக்கு வேல்முருகன் மறைமுக எச்சரிக்கை

சிறிய கட்சியாக தொடங்கிய தவாக, இன்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக உருவெடுத்துள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழீழ படுகொலை, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை மீது நடவடிக்கை இல்லாவிட்டால், கூட்டணி தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று திமுகவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக – தவாக இடையே சட்டப்பேரயிலும் மோதல் போக்கு தொடர்வது குறிப்பிடத்தக்கது.
News October 27, 2025
எவ்வளவு கலோரிக்கு எவ்வளவு நிமிடம் நடக்க வேண்டும்?

நடைபயிற்சி செய்வதால், உடலில் நிமிடத்திற்கு சராசரியாக 3-4 கலோரி எரிகிறது. 1 மணி நேரம் நடந்தால், சராசரியாக 234 – 250 கலோரிகளை எரிக்கலாம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் எவ்வளவு கலோரிகள் உள்ளன, அதற்கு எவ்வளவு நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.


