News February 23, 2025
மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய உ.பி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹென்றி 23 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய டெல்லி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Similar News
News February 23, 2025
கொடுத்த பணத்தை திரும்ப பெறும் டிரம்ப்

அமெரிக்காவின் முந்தைய பைடன் அரசாங்கம், போர் உதவியாக உக்ரைனுக்கு பல மில்லியன் டாலர் நிதி, பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது. தற்போது அதை திரும்ப பெற முயற்சித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். பணத்திற்கு மாற்றாக, உக்ரைனில் உள்ள $500 பில்லியன் மதிப்புள்ள அரிய கனிம வளங்களை டிரம்ப் கேட்டு வருகிறார். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அரசு மறுத்து வருகிறது.
News February 23, 2025
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ₹66,563 கோடி நஷ்டம்

TNSTC கடந்த 30 ஆண்டுகளில் ₹66,563 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கடந்த 1991 – 96 கால கட்டத்தில் ₹238 கோடியும், 1996 – 2001 வரை ₹1,094 கோடியும், 2011 – 16இல் ₹26,351 கோடியும், 2021 – 2024 வரையில் ₹24,067 கோடியும் இழப்பை சந்தித்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக ₹5,000 – ₹6,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மகளிர் இலவச பயணத்திற்கு ₹9,714 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
News February 23, 2025
திசை தெரியாமல் செல்லும் அதிமுக கப்பல்..

திசை தெரியாமல் செல்லும் அதிமுக கப்பலை தலைமை ஏற்க வருக! வருக! என சசிகலாவுக்கு ஆதரவாக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் டிரெண்டாகி வருகிறது. அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வழக்கு, முன்னாள் அமைச்சர்களின் அதிருப்தி என மீண்டும் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான நாளை(பிப்.24) சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.