News September 3, 2025
பெண்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க..

பெண்கள் ஆரோக்கியத்துக்கு, டாக்டர்கள் தரும் டிப்ஸ்:
*35+ வயது பெண்களின் தசைகள் பலவீனமடையும். அதனால், தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம்.
*தினசரி புரோட்டீன், கால்சியம் சத்துகள் கொண்ட உணவுகளை உட்கொள்ளவும்
*எலும்புகள் வலுவாக இருக்க வாரம் 2 முறை Strength training செய்வது அவசியம்.
குடும்பத்தின் ஆணிவேரான பெண்கள், ஆரோக்கியமாக இருந்தால்தான், வீட்டிலுள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.SHARE IT.
Similar News
News September 3, 2025
நாவல் to சினிமா: படங்களின் லிஸ்ட்

சினிமாவிற்கும், இலக்கியத்திற்கும் ஒரு ஆழமான நட்புறவு இருந்து கொண்டே தான் இருக்கிறது. என்னதான் சொந்த அனுபவங்களை திரைக்கதையாக மாற்றி இயக்குநர்கள் படங்களை உருவாக்கினாலும், அவ்வப்போது நாவல்களில் இருந்தும் படங்கள் பரிணமிக்கின்றன. அந்த வகையில், நாவலை மையமாக வைத்து உருவான படங்களின் பட்டியலை இங்கு தொகுத்துள்ளோம். இதில் விடுபட்ட படங்கள், உங்களுக்கு தெரிந்த படங்களை கமெண்ட் பண்ணுங்க.
News September 3, 2025
GST 2.0: இந்த பொருள்களின் விலை உயரும்!

இன்றைய GST கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. அதன்படி *1200cc-க்கு அதிகமான கார்கள், 350cc-க்கு அதிகமான பைக்குகளுக்கு 40% வரிவிதிக்கப்படும். *₹40 லட்சத்திற்கு குறைவான EV கார்களுக்கு 18%, ₹40 லட்சத்திற்கு அதிகமான EV கார்களுக்கு 40% வரி. *நிலக்கரிக்கான வரி 5%-ல் இருந்து 18% ஆக உயர்வதால், மின்சார கட்டணம் உயரும். *பிராண்டட் ஜவுளி பொருள்களுக்கு 18%-ஆக வரி உயர்த்தப்படுமாம்.
News September 3, 2025
வைரஸ் பரவலுக்கு பயப்பட வேண்டாம்: சுகாதாரத்துறை

தமிழகத்தில் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் பரவவில்லை எனவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளூயன்சா பாதிப்பு மட்டுமே உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.