News February 7, 2025
பெண்கள் ரயிலில் கூட செல்ல முடியவில்லை: இபிஎஸ்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை என EPS வேதனை தெரிவித்துள்ளார். ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்பில் அரசு கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News September 7, 2025
ரகசிய விடுமுறையில் ராகுல்: பாஜக கடும் விமர்சனம்

ராகுல் காந்தி மலேசியாவில் ரகசிய விடுமுறையை அனுபவித்து வருவதாக BJP IT பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார். பிஹார் அரசியல் சூட்டில் இருந்து ஓய்வு எடுக்கவோ, அல்லது ரகசிய சந்திப்பிற்காகவோ காங்கிரஸ் இளவரசர் சென்றிருக்கலாம் என கிண்டலடித்துள்ளார். மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது, அவர் விடுமுறையில் இருப்பதாகவும் அமித் மாளவியா சாடியுள்ளார். காங்., தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
News September 7, 2025
மாதம் ₹12,500 வழங்கும் தமிழக அரசு.. இந்த திட்டத்தை பாருங்க

நீயே உனக்கு ராஜா திட்டம் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, சம்பளமும் தருகிறது தமிழக அரசு. இதற்கு, <
News September 7, 2025
விஜய்யால் தாக்கம் ஏற்படுத்த முடியாது: ராஜகண்ணப்பன்

தனியாக நிற்கும் விஜய்யால் அரசியலில் ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தலாம். ஆனால், அதில் பங்கேற்கும் சிறுவர்களால் ஓட்டு போட முடியாது என அவர் விமர்சித்துள்ளார். மேலும், திடீரென வந்து அரசியல் செய்வது சாதாரணமல்ல என்றும் கூறியுள்ளார். நீங்க என்ன நினைக்குறீங்க?