News March 22, 2024
பெண்களை மையமாக கொண்ட படங்கள் வெற்றி

பெண்களை மையமாக வைத்து வரும் படங்கள் வெற்றி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “பெண்களை மையமாக வைத்து தற்போது அதிக படங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்களும் வெற்றி அடைகின்றன. இதை காண்கையில் மகிழ்ச்சியளிக்கிறது. நமது மக்கள் அனைத்து வகையான படங்களையும் விரும்புவதையே இது காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2025
அதிமுக – பாஜக கூட்டணி.. நயினார் முடிவில் திடீர் மாற்றம்!

தொகுதி பங்கீடு தொடர்பாக நயினாரின் பேச்சு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. கடந்த 12-ம் தேதி தாமரை 40 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றார். இது அதிமுக நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்நிலையில், நேற்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தொகுதி பங்கீடு குறித்து யாரும் பேச வேண்டாம் எனவும் இரட்டை இலையோடு சேர்ந்து அதிகமாக சட்டப்பேரவைக்கு செல்வோம் என்றும் கூறியுள்ளார். ஏன் இந்த திடீர் மாற்றம்?
News April 20, 2025
எங்கே செல்லும் இந்த பாதை?..

ஓட்டுக்கு காசு வாங்குறது, டிராஃபிக் மீறுனா, ஹெல்மெட் போடலனா போலீஸ கவனிக்குறதுன்னு லஞ்சம் புரையோடி போயிருக்கு. இந்த தவறான பழக்கம் அடுத்த தலைமுறையையும் விட்டு வைக்கல. லஞ்சம் கொடுத்தா எந்த வேலையும் முடிஞ்சிடும்னு அழுத்தமா அவங்க மனசுல பதிஞ்சு போயிருக்கு. அதுக்கு உதாரணமா தான் கர்நாடகாவுல பரீட்சையில் பாஸ்ஸாக டீச்சருக்கே லஞ்சம் கொடுக்குற அளவுக்கு வளர்ந்திருக்கு. இது எங்க போயி முடியுமோ?
News April 20, 2025
அவர்கள் இணைந்தால் பாஜகவிற்கு என்ன? பட்னவிஸ்

<<16151222>>உத்தவ் தாக்கரேவும்<<>>, ராஜ் தாக்கரேவும் இணைவதில் மகிழ்ச்சி என மகாராஷ்டிரா CM பட்னவிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அதில் ஏன் பாஜக தலையிட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்தி திணிப்பை எதிர்த்து சகோதரர்களான 2 தாக்கரேக்களும் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு வருத்தம் எனக் கூறப்படுகிறது.