News December 25, 2024
வொயிட் காலர் வேலையில் முன்னேறும் பெண்கள்

தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கும் Formal Sectorகளில் புதிய ஆட்சேர்ப்பு, கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. EPF அறிக்கையின் படி, கடந்த OCTல் 7.50 லட்சம் பேர் EPFல் கணக்கு தொடங்கியுள்ளனர். இது கடந்த SEPல் 9.47 Lakhs ஆக இருந்தது. 18-25 வயதினரின் எண்ணிக்கையும் 5.67Lலிருந்து 4.38Lஆக குறைந்துள்ளது. இருப்பினும், பெண்களின் எண்ணிக்கை 26.1%லிருந்து 27.9% ஆக அதிகரித்துள்ளது.
Similar News
News September 11, 2025
7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்ட நாயகன்: குல்தீப் கம்பேக்

ஆசிய கோப்பை தொடரில், தனது முதல் போட்டியை இந்தியா அதிரடியாக துவங்கியுள்ளது. குறிப்பாக, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் மிரட்டிவிட்டார். 7 ஆண்டுகளுக்கு பிறகு டி20 மேட்ச்சில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். எனவே, அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், இங்கி.,க்கு எதிரான தொடரில் விளையாடிய இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 11, 2025
மூலிகை: இது தெரிஞ்சா, துத்தி இலையை அள்ளி சாப்பிடுவீங்க!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
*துத்தி இலைகளை பச்சையாக சாப்பிட்டால் தசைகளை வலுப்பெறும்.
*துத்தி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளித்தால் ஈறுகளின் ரத்தப்போக்கு நீங்கும்.
*துத்தி இலைகளை நெய்யில் சாதத்துடன் சேர்த்து, 40- 120 நாட்கள் சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.
*துத்தி பூக்களை உலர்த்தி, நீரில் கலந்து குடித்து வந்தால் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். SHARE IT.
News September 11, 2025
கட்சி பொறுப்பில் இருந்து கூண்டோடு நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் உச்சம் தொட்ட நிலையில், கோவையில் 3 தலைவர்களை கூண்டோடு நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது. மாநகர் மாவட்ட தலைவர் கருப்புசாமி, வடக்கு மாவட்ட தலைவர் VMC மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் N.K.பகவதி மூவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை குறிவைத்து தலைமை நகர்ந்தாலும், நிர்வாகிகளிடையே உள்கட்சி பூசல் விவகாரம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.