News October 26, 2024
திட்டக்குடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

திட்டக்குடி அடுத்த வடக்கு விருதாங்கால் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி தமிழரசி (37). இவர் குலதெய்வ கோயிலுக்கு பொங்கல் வைக்க தாமதமாக சென்றதால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் புகழேந்தி, தமிழரசியை திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த தமிழரசி, நேற்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
கடலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News January 17, 2026
கடலூர்: 3 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்கள்

நடுவீரப்பட்டு போலீஸ் எஸ்.ஐ. ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று நரியங்குப்பம் ஓடை அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பத்தை சேர்ந்த சபாபதி மகன் நவீன் (25), கடலூர் ராணிப்பேட்டையை சேர்ந்த செல்வம் மகன் அருண்குமார் (18), நரியங் குப்பத்தை சேர்ந்த வேல்முருகன் மகன் சசிகுமார் (22) ஆகியோரை கைது செய்தனர்.
News January 17, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


