News February 25, 2025

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற பெண்

image

தெலங்கானாவில் கஜ்வெல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். நரசிம்முலு, நாகரத்னா தம்பதியினருக்கு 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேய்களும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Similar News

News February 26, 2025

2000 இந்தியர்கள் பலி… கண்ணீர் அஞ்சலி

image

பிப்.25, 1944-ம் ஆண்டு. 2-ம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது ஜப்பானிய கப்பல்களான ‘ரியுசெய்’ ‘டேங்கோ மாரு’ இரண்டும் இந்தோனேஷியா அருகே சென்று கொண்டிருந்தபோது, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் பயங்கர தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அந்த கப்பல்களில் இருந்த 2000-க்கு மேற்பட்ட இந்தியர்கள் உள்பட 8000 பேர் பலியானார்கள். வரலாற்றில் மறக்கப்பட்ட மிகப் பயங்கரமான அழிவில் பலியான நம் சகோதரர்களை நினைவுகூர்வோம்.

News February 26, 2025

டெல்லி அணி அபார வெற்றி

image

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவில் முதலில் விளையாடிய குஜராத் அணி, 127/9 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய DCW அணி, 15.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோனாசன் 61, ஷஃபாலி வர்மா 44 ரன்கள் எடுத்தனர். நாளை இரவு 7.30க்கு நடைபெறவுள்ள போட்டியில் உ.பி., வாரியர்ஸை, மும்பை அணி எதிர்கொள்கிறது.

News February 26, 2025

நாய்க்குட்டிக்காக கண்ணீர் விட்ட த்ரிஷா

image

நடிகை த்ரிஷா வளர்த்த ஸோரோ இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தது. இதனால், மனமுடைந்த அவர், பணிகளில் இருந்து சில காலம் ஓய்வு எடுத்துக் கொண்டார். இதனையடுத்து, ஸோரோவின் இரண்டாவது மாத நினைவு நாளுக்கு அவர் விளக்கேற்றி மரியாதை செய்தார். இதுகுறித்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், தற்போது அவருடன் இருக்கும் நாய்க்குட்டியான இஸ்ஸியை அனுப்பியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!