News April 21, 2025
சிறுவனை கடத்தி ரேப்.. பெண்ணுக்கு 20 ஆண்டு ஜெயில்

ராஜஸ்தானில் சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 16 வயது சிறுவனை லாலிபாய் மோஹியா (30) என்ற பெண் விரும்பியுள்ளார். அவனுடன் உடலுறவில் ஈடுபட விரும்பி கடத்தி, ஓட்டலில் அடைத்து வைத்து மதுவை அளித்து 7 நாள்கள் வரை ரேப் செய்துள்ளார். போலீசார் லாலிபாயை கைது செய்து சிறுவனை மீட்டனர். இந்த வழக்கில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News September 10, 2025
BREAKING: செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டார்

RB உதயகுமாரின் தாய் குறித்து பேசியதற்கு செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டுள்ளார். செங்கோட்டையனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து RB உதயகுமார் வீடியோ வெளியிட்டார். அதுகுறித்து கேட்டபோது, ‘அவரது தாய் இறந்துவிட்டார், முதலில் அதை பார்க்கச் சொல்லுங்கள்’ என செங்கோட்டையன் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட அவர், RB உதயகுமாரின் தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் என்றார்.
News September 10, 2025
இந்தியாவின் சுழலில் தடுமாறும் UAE

ஆசியக்கோப்பையில் முதலில் பேட்டிங் செய்துவரும் UAE இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணியில் இணைந்த குல்தீப் யாதவ், 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 10.3 ஓவர்கள் முடிவில் UAE 6 விக்கெட்டுகளுக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் அந்த அணி 100 ரன்களை தாண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 10, 2025
இளையராஜாவின் விழாவை சிலாகித்து CM பதிவு

வரும் 13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் <<17656899>>இளையராஜாவுக்கு பாராட்டு விழா<<>> நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், நமது பாராட்டு விழா ‘ராஜாவைத் தாலாட்டும் தென்றல்’ என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விழா இசையின் அரசனுக்கு மட்டுமல்ல என கூறிய CM, அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமானது என குறிப்பிட்டுள்ளார்.