News April 3, 2024
வெயிலில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் வெயிலில் மயங்கி விழுந்து ஜோஸ்பின் மேரி (40) என்ற பெண் உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டுக்கான கோடை காலம் அதிக வெப்பத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல்லில் இன்று வெயில் 39 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. இந்த வெயிலில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்லவும்.
Similar News
News November 1, 2025
தமிழக மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கணும்: SPK

பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பிய மோடி, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை (SPK) வலியுறுத்தியுள்ளார். தேர்தல் லாபத்துக்காக தமிழக மக்களை பழித்துக் கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது; தமிழர்கள் உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்; அப்படி இருக்கையில் தமிழர்கள் மீதான அவதூறு கருத்தை மோடி திரும்ப பெற வேண்டும் என்றார்.
News November 1, 2025
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்

தமிழ்நாடு உருவாக காரணமான எல்லை போராட்ட தியாகிகளையும், ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம் என விஜய் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவிடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் எனவும் 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்றும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 1956 நவ.1-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
ஆந்திரா, கேரளா, கர்நாடகா பிறந்த தினம் இன்று!

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நாள் இன்று. கேரளா, கர்நாடகா, ஆந்திரா அப்போது சென்னை மாகாணத்தோடு இணைந்தே இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதன் எதிரொலியாக, 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி முதல் மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் உருவாயின.


