News August 14, 2024

பெண் மருத்துவர் கொலை: சிபிஐ விசாரணை தொடக்கம்

image

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிபிஐ விசாரணையை தொடங்கியது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐயிடம் கொல்கத்தா காவல்துறை ஒப்படைத்தது. தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News November 25, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை ( BLO ) அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுகள் தெரிவித்தார்.

News November 25, 2025

மாவட்ட செயலாளர்களுடன் EPS முக்கிய ஆலோசனை

image

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக மாவட்ட செயலாளர்களுடன் EPS ஆலோசனை நடத்தினார். SIR படிவங்களை நிரப்ப பூத் கமிட்டி நிர்வாகிகள் களத்தில் இருக்க வேண்டும் எனவும், முறைகேட்டில் ஈடுபடும் திமுகவினர் குறித்து தேர்தல் அலுவலகத்தில் புகாரளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். களத்தில் அதிமுக பூத் நிர்வாகிகளே இல்லை என திமுக விமர்சித்து வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

News November 25, 2025

₹20,000 சம்பளம்.. தமிழகத்தில் 2,417 பணியிடங்கள்

image

தமிழகத்தில் 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான (பெண்கள் மட்டும்) அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 12th தேர்ச்சியுடன் 2 ஆண்டு துணை செவிலியர் (அ) பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி. சம்பளம்: ₹19,500 – ₹71,900. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.14. இது குறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

error: Content is protected !!