News April 3, 2025
நள்ளிரவில் பெண்ணுக்கு கொடூரம்… 2 பேர் கைது!

கேரளாவின் எர்ணாகுளத்தில் பணியாற்றி வருகிறார் அந்தப் பெண். சொந்த மாநிலமான பிஹாருக்கு சகோதரனுடன் ரயிலில் புறப்பட்டார். வழியில், பெங்களூரு ஸ்டேஷனில் இறங்கி உணவு வாங்க 2 பேரும் வெளியே வந்தனர். அப்போது, பின்தொடர்ந்த 2 அந்நியர்களில் ஒருவன், சகோதரனை பிடித்து வைத்துக் கொள்ள, மற்றொருவன் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். 2 கொடூரர்களையும் போலீஸ் கைது செய்திருக்கிறது.
Similar News
News April 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்
குறள் இயல்: துறவறவியல்
அதிகாரம்: வெகுளாமை.
குறள் எண்: 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என். பொருள்: தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.
News April 9, 2025
தோனியின் ஆவேசம் வீண்.. தொடரும் சோகம்

ஆட்டங்களை முடித்து வைப்பதில் வல்லவரான தோனிக்கு இந்த சீசன் மிக மோசமாக அமைந்துள்ளது. தோனி இருக்கிறார் வெற்றி நிச்சயம் என நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. இன்றைய ஆட்டத்திலும் அது மாறவில்லை. நேற்று 5வது வீரராக களமிறங்கிய தோனி 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். எனினும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. மீண்டு வருமா சென்னை?
News April 9, 2025
பான் இந்தியா என்பது அசிங்கம்: செல்வராகவன் காட்டம்

பான் இந்தியா என்ற அசிங்கமான கலாசாரம் வந்ததால், நல்ல சினிமாக்கள் குறைந்துவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் காட்டமாக தெரிவித்துள்ளார். குத்துப் பாடல்கள் கொண்ட கமர்ஷியல் படங்களே தற்போது அதிகரித்துள்ளதாகவும், 100 நாள்கள் ஓடிய படங்களெல்லாம் இப்போது 3 நாள்களில் முடிந்து விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மிக சுலபமாக ஒரு படத்தைக் குதறி, இயக்குநர்களின் வாழ்க்கையை காலி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.