News September 14, 2024

உதவித்தொகை பெற நகையை அடகு வைத்த அவலம்

image

ஒடிசாவில் அரசு உதவித் தொகையை பெறுவதற்காக மனைவியின் நகையை அடகு வைத்த அவலம் நடந்துள்ளது. ஆதார் எண் OTP அவசியம் என்பதால், நுவாகடா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவர் ஒருவர், மனைவியின் நகையை அடகு வைத்து மொபைல் வாங்கியுள்ளார். அரசு உதவி செய்வது நல்லது தான், ஆனால் ஏழைகளாகிய தங்களுக்கு இவ்வளவு நிபந்தனைகளை பூர்த்தி செய்வது சிரமமாக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 22, 2025

திடீர் ஓய்வை அறிவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்

image

சுழற்பந்து வீச்சாளர் கௌஹர் சுல்தானா(37) அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். 2008-ம் ஆண்டு அறிமுகமான இவர், 50 ODI போட்டிகளில் 66 விக்கெட்களும், 37 T20 போட்டிகளில் 29 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். மேலும், 2009 & 2013 ODI WC, 3 T20 WC தொடர்களிலும் விளையாடியுள்ளார். 2024 & 2025 WPL தொடர்களில் UP வாரியர்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை சுல்தானா வெளிப்படுத்தி இருந்தார்.

News August 22, 2025

உங்க செல்போனில் உடனே இதை செக் பண்ணுங்க

image

பல போன்களின் Calling Interface மாற்றப்பட்டுள்ளது. அதாவது, முன்னர் வரும் அழைப்பை Attend அல்லது Reject பண்ண, மேலே அல்லது கீழே Swipe செய்வோம். இது தற்போது, இடது- வலது புறமாக Swipe செய்யும் வகையில் மாறியுள்ளது. Realme, Oneplus, Moto, Oppo, Vivo போன்ற போன்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயனாளர்கள் வேண்டுமென்றால், பழைய படி மேலே- கீழே Swipe செய்யும் வகையிலும் மாற்றிக் கொள்ளலாம்.

News August 22, 2025

அவதார புருஷனா விஜய்? RB உதயகுமார் சாடல்

image

அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் அதன் தொண்டர்கள் வேதனையுடன் இருப்பதாக விஜய் கூறியிருந்தார். இந்நிலையில், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே விஜய், அதிமுகவை விமர்சித்திருக்கலாம் என RB உதயகுமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக் கொள்வதாக கடுமையாக சாடியுள்ளார். மேலும், அதிமுக EPS தலைமையில் தான் செயல்படுகிறது என்றார்.

error: Content is protected !!