News April 14, 2024
ஒற்றுமை இன்றி I.N.D.I.A கூட்டணி பலமிழந்து விட்டது

ஒற்றுமை இல்லாததால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலமிழந்து விட்டதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சாதி வாரிக் கணக்கெடுப்பு கருத்தில் கொள்ள வேண்டியது எனினும், சிறந்த கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் மூலம் பின்தங்கியோருக்கு அதிகாரம் வழங்குவது அவசியம் எனவும், காங்கிரஸ் தனது அமைப்பு ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
குமரி: 12th தகுதி.. ரூ.21,700 சம்பளத்தில் வேலை உறுதி!

குமரி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <
News November 26, 2025
பிரபல நடிகர் காலமானார்.. பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி

நடிகர் தர்மேந்திரா (89) மறைந்த அன்றே, அவரது இறுதிச்சடங்கு அவசர அவசரமாக நடந்ததால், பலரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால், நேரில் செல்ல முடியாத நட்சத்திரங்கள், தற்போது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த வார இறுதியில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் நட்சத்திர நடிகர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
News November 26, 2025
அதிகார திமிர்: கம்பீரை தாக்கிய கோலியின் அண்ணன்

தெ.ஆ., எதிரான டெஸ்ட்டில் இந்தியா திணறுவதால் பலரும் கம்பீரை விமர்சிக்கின்றனர். இந்நிலையில், விராட் கோலியின் சகோதரர் விகாஸும் மறைமுகமாக கம்பீரை தாக்கியுள்ளார். ஒருகாலத்தில் வெளிநாட்டு மண்ணில் கூட அசால்ட்டாக வெற்றிபெற்ற IND அணி தற்போது சொந்த மண்ணில் திணறுவதாக கூறியுள்ளார். மேலும், ஒழுங்காக இருந்த விஷயங்களை மாற்றி, அதிகாரம் செலுத்த முயற்சித்த ஒருவரால்தான் இது நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


