News March 22, 2025
திமுக கூட்டணியில் இருந்து விலகல்.. முடிவு செய்யலாம்

சட்டப்பேரவையில் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துக் கொள்ளும் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னை கசந்து கொண்டே திமுக கூட்டணியில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று வேல்முருகன் பேசியிருந்தார். இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து அவரே முடிவு செய்யலாம் என வெளிப்படையாக சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
Similar News
News March 22, 2025
2 நாள்களில் ₹640 குறைந்த தங்கம்.. மேலும் குறைய வாய்ப்பு!

ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த <<15844776>>தங்கம்<<>> கடந்த 2 நாள்களாகக் குறைந்துள்ளது. நேற்று ₹320, இன்று ₹320 எனச் சவரனுக்கு ₹640 சரிந்துள்ளது. கடந்த சில தினங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டுள்ளதால் வரும் நாள்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News March 22, 2025
ஐபிஎல் திருவிழா: டூடுலை மாற்றிய கூகுள்!

ஐபிஎல் ஃபீவர் கூகுளையும் விட்டு வைக்கவில்லை போலிருக்கிறது. இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில், இரு வாத்துகள் கிரிக்கெட் விளையாடுவது போன்ற டூடுலை கூகுள் வடிவமைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் KKR, RCB அணிகள் மோதுகின்றன. இதுவரை இந்த அணிகள் இடையே நடந்த 34 போட்டிகளில் KKR 20, RCB 14 போட்டிகளில் ஜெயித்துள்ளன. இன்றைய மேட்ச்சில் யார் ஜெயிப்பார்கள்?
News March 22, 2025
மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு கூடாது: பட்நாயக்

மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் முக்கியமான கூட்டம் இது என ஒடிசா முன்னாள் CM நவீன்பட்நாயக் பாராட்டியுள்ளார். கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் காணொளி மூலம் உரையாற்றிய அவர், மாநிலங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், நாட்டில் மக்கள் தொகை பெருகியிருக்கும் என்றார். எனவே, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்தக் கூடாது என வலியுறுத்தினார்.