News April 2, 2025

வக்ஃபு மசோதாவை திரும்ப பெறுக.. முதல்வர் கடிதம்

image

வக்ஃபு திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை வழங்குகிறதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1995ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவை திரும்பபெற வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News January 18, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 584 ▶குறள்: வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையும் ஆராய்வ தொற்று ▶பொருள்: தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

News January 18, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 18, 2026

அண்ணன் படம் வராததால் தம்பி படம்: ஜீவா

image

‘ஜன நாயகன்’ சென்சார் பிரச்னை காரணமாக வெளிவராததால், கார்த்தி, ஜீவா ஆகியோரின் படங்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஜீவா, அண்ணன் படம் வராததால் தம்பி படம் வந்துள்ளதாக கலகலப்பாக பேசினார். மேலும், படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார்.

error: Content is protected !!