News June 6, 2024

எனது அன்பு சகோதரனுடன் ❤️

image

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், INDIA கூட்டணி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். அப்போது ராகுல் காந்தியுடன் அமர்ந்திருந்த புகைப்படத்தை தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், எனது அன்பு சகோதரனுடன் என கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் ஹார்டின் சிம்பலுடன் #BrotherGoals எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 8, 2026

திருவாரூர்: மது போதையில் தவறி விழுந்து ஒருவர் பலி

image

கோட்டூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் நேற்று இரவு கோட்டூர் அரசு மதுபானக் கடையில் மதுவை வாங்கிக் கொண்டு அடப்பாற்றில் இருந்து பிரியும் வாய்க்கால் மதகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இந்நிலையில், மது போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு இறந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் கோட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News March 8, 2026

தங்கம் விலை இந்த வாரத்தில் ₹5,800 குறைந்தது!

image

தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடும் உயர்வைக் கண்டாலும், வர்த்தக ரீதியாக வார இறுதியில் சவரனுக்கு ₹5,800 சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மார்ச் 1-ம் தேதி ₹1,26,200-க்கு விற்பனையான தங்கம், தற்போது ₹1,20,400-க்கு விற்பனையாகிறது. அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 8, 2026

அரசியலில் விசுவாசம் குறைந்துவிட்டது: நேரு

image

அரசியலில் இப்போது விசுவாசம் குறைந்துவிட்டதாக அமைச்சர் KN.நேரு கூறியுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது. தஞ்சாவூரில், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி நினைவு மண்டப திறப்பு விழாவில் பேசிய அவர், அந்த கால அரசியல்வாதிகள் முன்பு உள்ளதை நினைத்து பார்க்கக் கூடியவர்கள் என்றார். அண்மை காலமாக பலர் திமுகவில் இணைவதை விரும்பாத நேரு, விசுவாசம் குறித்து பேசினாரா? என SM-ல் விவாதம் எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!