News August 10, 2024
மேலாண்மை சட்டத்தில் திருத்தம் கோரிய வில்சன்

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இல் திருத்தம் செய்ய கோரி திமுக எம்.பி., வில்சன் தனிநபர் மசோதா அறிமுகம் செய்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், “பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பிரதமரும், அவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும். ஆளுங்கட்சி & எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்ற வேறுபாடில்லாமல், நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News November 25, 2025
தூத்துக்குடியில் குவியும் பறவைகள் PHOTOS

தூத்துக்குடி கடலோர பகுதிகளில் வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளன. இந்த வருடம் ஏராளமான புலம்பெயர் பறவைகள், மீன், பூச்சிகள் உள்ளிட்ட இரைகளுக்காக குவிந்துள்ளன. இது ஈரநிலங்களில் சுற்றுச்சுழல் மேம்பட்டு இருப்பதை பிரதிபலிக்கிறது. மேலே, பறவைகளில் போட்டோக்களை பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 25, 2025
மகாவீரர் பொன்மொழிகள்

*தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேச்சிலும் செயலிலும் பின்பற்றுதலுக்கு பெயரே வாய்மை.
*தனக்கு உரிமையில்லாததையும், கொடுக்கப்படாததையும் தனக்கு எடுத்து கொள்ளாதிருத்தல்.
*ஆன்மிக நோக்கில் ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு அடைய முடியும்.
*நம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகியவற்றை கடைபிடித்தால் சித்த நிலையை அடையலாம்.
News November 25, 2025
விசிகவே ஒரு பல்கலை தான்: திருமாவளவன்

அம்பேத்கர் கனவை சிதைப்பதே பாஜகவின் நோக்கம் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். வெயில், மழை பாராது பொருளில்லாமல் மந்தைகளை போல் மக்கள் காத்துக் கிடக்கும் போக்கு கொண்ட அரசியல் மாற வேண்டும் என்றார். எனவே, ஒவ்வொருவரும் அரசியலில் தெளிவுபெற வேண்டும் என்ற திருமா, அதற்காக கல்லூரி செல்ல வேண்டியதில்லை, ஏனென்றால் விசிகவே ஒரு பல்கலை தான் என குறிப்பிட்டார். உங்கள் கருத்து என்ன?


