News April 21, 2025
திமுக கூட்டணியில் இருந்து விலக காய் நகர்த்தும் விசிக?

திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை என திருமாவளவன் கூறிய நிலையில், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது, TN அரசின் காலி பணியிடங்களை நிரப்பவும், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்றவும் திருமா வலியுறுத்தியுள்ளார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவிற்கு அவர் அழுத்தம் கொடுப்பதில் அரசியல் கணக்கு இருக்குமா?
Similar News
News November 21, 2025
சென்னை: டிகிரி போதும், ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் இங்கு <
News November 21, 2025
BREAKING: புதிய கட்சி தொடங்கும் ராமதாஸ்!

பாமகவை சட்ட ரீதியாக கைப்பற்றும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், தனது ஆதரவாளர் ஒருவர் பெயரில் அய்யா பாட்டாளி மக்கள் கட்சி(APMK) தொடங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக எந்த கட்சியிலும் இல்லாத 100 பேரிடம் பிரமாணப்பத்திரம் வாங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 2026 பேரவைத் தேர்தலில் மாம்பழம் சின்னம் தனது தரப்புக்கு கிடைக்காவிட்டால் பொது சின்னத்தை பெற இத்திட்டம் எனக் கூறப்படுகிறது.
News November 21, 2025
இளையராஜா போட்டோக்களை பயன்படுத்த தடை

இளையராஜாவின் புகைப்படங்களை SM-ல் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் மியூசிக் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது பெயர், புகைப்படம், இசைஞானி என்ற பட்டம் என எதையும் பயன்படுத்தக்கூடாது என்ற இளையராஜாவின் முறையீடு ஏற்கப்பட்டுள்ளது.


