News August 11, 2024
ராஜ்யசபா எம்பி பதவியை தவற விடும் வினேஷ் போகத்?

வினேஷ் போகத் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ராஜ்ய சபா உறுப்பினராக 30 வயது தேவை என்ற நிலையில், அவருக்கு ஆக.25 அன்று தான் 30 வயது ஆகிறது. தேர்தல் செப்.5இல் நடக்கும் நிலையில், வேட்பு மனுதாக்கல் செய்ய ஆக.21 கடைசி நாளாகும். ஹரியானாவில் இருந்து வினேஷ் போகத்தை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்., விரும்புவதாக அம்மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்திருந்தார்.
Similar News
News October 18, 2025
தீபாவளி.. மதுப்பிரியர்களுக்கு HAPPY NEWS

தீபாவளியையொட்டி மது தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகம் விற்பனையாகும் மது வகைகளின் இருப்பை கணிசமாக உயர்த்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வழக்கத்தைவிட மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 18, 2025
தங்கம் முதலீடு அல்ல, காப்பீடு: ஸ்ரீதர் வேம்பு

தங்கம் வாங்குவது முதலீடு அல்ல, அது தான் ஒருவரின் Insurance என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க பங்கு சந்தையின் நிலையற்றத்தன்மையால், வேகமாக ஏறும் மதிப்புகள் திடீரென முழுவதுமாக சரிய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். 2008 நிதி நெருக்கடி போல மீண்டும் வரலாம் என்று எச்சரித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, நிதி அபாயத்தில் இருந்து காக்கும் காப்பீடு தங்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
News October 18, 2025
முன்னோர்கள்னா சும்மா இல்ல பாஸ்.. கொஞ்சம் இத பாருங்க

நமது பாரம்பரியமும், கலாசாரமும் அறிவியலுக்கு என்றுமே சவாலாகவோ (அ) திகைப்படையச் செய்யும்படியே இருக்கும். அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயில்கள் 79° தீர்க்கரேகையில் ஒன்று போல் அமைந்துள்ளன. இந்த வாயைப் பிளக்கும் அதிசய கோயில்களை மேலே swipe செய்து பாருங்கள். நீங்கள் பார்த்த சிறப்புவாய்ந்த கோயில் எதுவென்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.