News April 18, 2025
விஜய் வருகையால் திமுக, அதிமுகவுக்கு பெரும் சவால்?

2021-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 234 இடங்களில் திமுக + 159 இடங்களைப் பிடித்தது. திமுக (37.7%) மட்டும் தனித்து 125 இடங்களை கைப்பற்றியது. அதிமுக + 75 இடங்களை வென்றது. இதில் அதிமுக மட்டும் (33.29%) 65 இடங்களை பெற்றது. இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு சதவீத வேறுபாடு 5% கூட இல்லை. தற்போது விஜய் வருகையால், 2026 தேர்தல் போட்டி இன்னும் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News November 20, 2025
கோவை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

கோவை மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News November 20, 2025
ஆரிய சூழ்ச்சிகளை உடைத்தெறிவோம்: CM ஸ்டாலின்

நீதிக்கட்சி தொடங்கிய நாளையொட்டி X தளத்தில் பதிவிட்டுள்ள CM ஸ்டாலின், மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் உரிய பங்கை பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்ட, தாய் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று என குறிப்பிட்டுள்ளார். நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி என மெய்ப்பிப்போம் என்று கூறியுள்ள அவர், ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
உடைகிறதா BJP-சிவசேனா கூட்டணி?

மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கூட்டணியான பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, மகராஷ்டிரா BJP, சிவசேனா தலைவர்களை பாஜக பக்கம் இழுப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். கூட்டணி பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளுமாறும் அமித்ஷாவிடம் அவர் வலியுறுத்தினார்.


