News March 20, 2024
தேர்தலில் களமிறங்கும் விஜய பிரபாகரன்?

மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்காக தேமுதிக அலுவலகத்தில் விஜய பிரபாகரன் விருப்ப மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
Similar News
News December 28, 2025
வேலூர்: ஒரே நாளில் குவிந்த 6186 மனுக்கள்!

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் வேலூர் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பாக 6,186 பேர் விண்ணப்பித்தனர். இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
News December 28, 2025
2025 REWIND: இந்தியர்களின் டாப் 5 பெஸ்ட் T20I இன்னிங்ஸ்!

2025 இந்தியாவிற்கு T20I-ல் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. மொத்தமாக 21 போட்டிகளில் விளையாடி, அதில் 15 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி நடைக்கு வழிவகுத்த இந்திய வீரர்களின் டாப் 5 இன்னிங்ஸை மேலே குறிப்பிட்டுள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து யாரின் இன்னிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது என்பதை பாருங்க. இந்த லிஸ்ட்டில் வேறெந்த வீரரின் சிறப்பான இன்னிங்ஸை சேர்க்கலாம்?
News December 28, 2025
சிக்கன், முட்டை விலை நிலவரம்!

கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்திலிருந்த சிக்கன் விலை சற்று குறைந்துள்ளது. நாமக்கல் மொத்த சந்தையில் முட்டைக்கோழி கிலோவுக்கு ₹5 குறைந்து ₹90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் கறிக்கோழி கிலோவுக்கு ₹2 உயர்ந்து ₹128-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக முட்டையின் விலை மாற்றமின்றி ₹6.40 ஆகவே நீடிக்கிறது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ சிக்கன் விலை ₹190-₹240 வரை விற்பனையாகிறது.


