News September 27, 2025
அசம்பாவிதங்களுக்கு விஜய் பொறுப்பேற்பாரா?

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பான வீடியோக்கள் பதற வைக்கின்றன. தவெகவின் கூட்டங்களுக்கு மட்டும் பல நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக சமீபத்தில் தான் அக்கட்சி ஐகோர்ட்டை நாடியது. அப்போது, பொதுக்கூட்டங்களில் அசம்பாவிதம் ஏற்பட்டால், சம்பந்தபட்ட கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இன்றைய அசம்பாவிதத்திற்கு விஜய் பொறுப்பேற்பாரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
Similar News
News September 28, 2025
துபாய் பயணத்தை ரத்து செய்து கரூர் விரையும் உதயநிதி

கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட அசம்பாவிதம் தமிழகத்தை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து CM ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் EPS உள்ளிட்டோர் கரூருக்கு செல்ல உள்ளனர். இதனிடையே துபாய் பணத்தை ரத்து செய்துவிட்டு DCM உதயநிதியும் கரூர் செல்கிறார். ஏற்கெனவே EX அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மருத்துவமனையில் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
News September 28, 2025
கரூர் துயரம்.. விசாரணை ஆணையம் அமைப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது, 36 பேர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
News September 28, 2025
கரூர் துயரம்: கனிமொழி இரங்கல்

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனிமொழி MP இரங்கல் தெரிவித்துள்ளார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 36 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், CM போர்க்கால அடிப்படையில் தேவையான உதவிகளைச் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் X-ல் குறிப்பிட்டுள்ளார்.