News August 8, 2024
சல்மான் கானுடன் மோதும் விஜய் தேவரகொண்டா?

இந்திய சினிமாவில் அடிக்கடி முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகி நேரடியாக மோதுகின்றன. அந்த வகையில், முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துவரும் சிக்கந்தர் படத்தோடு, விஜய் தேவரகொண்டாவின் ‘VD12’ படம் மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரது படங்களையும் 2025 மார்ச் மாதத்தில் (28 & 30 ஆகிய தேதிகளில்) வெளியிட இரு படக்குழுக்களும் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News December 21, 2025
தெலங்கானாவிலும் வெறுப்பு பேச்சு எதிர்ப்பு சட்டம்

வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்டத்தை விரைவில் தெலங்கானாவில் கொண்டு வருவோம் என அம்மாநில CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த அரசு, ஒருவரின் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தையும், ஒவ்வொரு மதத்திற்கும் சம உரிமைகளையும் உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடகாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. தமிழகத்திலும் கொண்டு வரலாமா?
News December 21, 2025
மீண்டும் தெலுங்கில் ரீரிலீஸாகும் தனுஷின் 3

2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் 2026, பிப்.6-ல் தெலுங்கில் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2022-ல் தெலுங்கிலும், 2024-ல் தமிழிலும் இப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இதனால், ஒரு படம் 3-வது முறையாக ரீரிலீஸ் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். உங்களுக்கு இப்படத்தில் பிடித்த சீன் எது?
News December 21, 2025
BDS அட்மிஷனில் முறைகேடு: ராஜஸ்தான் அரசுக்கு அபராதம்

2016 – 17-ல் ராஜஸ்தானில் உள்ள 10 மருத்துவ கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு பர்சண்டைல் முறைகேடாக குறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், விதிமீறல் நிரூபணமானதாக கூறி, 10 கல்லூரிகளுக்கும் தலா ₹10 கோடி அபராதம் விதித்து SC உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், இந்த முறைகேட்டை அனுமதித்ததற்காக ராஜஸ்தான் மாநில அரசுக்கும் ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


