News January 21, 2025

விஜய்க்கு கை கொடுக்குமா வேங்கை வயல் அரசியல்

image

வேங்கைவயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை அரசால் எந்த தீர்வும் கொடுக்க முடியவில்லை. குறிப்பாக, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 2 ஆண்டுகள் கடந்தும் ஒருவரை கூட கைது செய்ய முடியவில்லை. இதற்கு முக்கியமாக சாதி ஓட்டு என்று திமுக அரசுக்கு எதிராக விமர்சனம் எழுகிறது. இந்நிலையில், விஜய் வேங்கை வயலுக்கு செல்வது அரசியல் ரீதியாக பலன் கொடுக்கும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 7, 2026

இந்தியாவை போட்டியாளராக மாற விடமாட்டோம்: அமெரிக்கா

image

சீனாவை போல இந்தியாவை எங்களது போட்டியாளராக மாற விடமாட்டோம் என டெல்லியில் நடந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு சந்தையை திறந்து விட்டது மிகப்பெரிய தவறு; அதை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் செய்யும் எந்த ஒரு ஒப்பந்தமும் அமெரிக்க மக்களின் நலனுக்கானது எனவும் கூறியுள்ளார்.

News March 7, 2026

புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டுகிறாரா விஜய்?

image

ஆரம்பத்தில் தவெகவில் All in All-ஆக வலம் வந்தவர் தான் புஸ்ஸி ஆனந்த். இடையில் இவர்மீது ஜானுக்கும், ஆதவுக்கும் அதிருப்தி அதிகரித்ததாக பேசப்பட்டது. எனவே ஆனந்த் குறித்து இருவரும் விஜய்யிடம் பலமுறை புகார் வைத்தனராம். போதாத குறைக்கு ஆனந்தின் மேடைபேச்சுகளும் ஆன்லைனில் கேலிக்கு உள்ளானதால் விஜய் மொத்தமாக ஆனந்தை ஒதுக்கிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் தவெக மேடைகளில் பேசுவதில்லை என்கின்றனர்.

News March 7, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹720 உயர்வு!

image

கடந்த 5 நாள்களாக சரிவைக் கண்டு வந்த தங்கம், இன்று திடீரென உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம், கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹15,050-க்கு விற்பனையாகிறது. சவரன் ₹720 அதிகரித்து ₹1,20,400-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையானது மாற்றமின்றி ஒரு கிராம் ₹290-க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!